சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு எம் எட் (M.Ed.) சேர்வதற்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல்
பட்டப்படிப்பு எம்.எட்., (Master of Education - M.Ed.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023 - 2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும்.