சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட விமானி, இயந்திரக் கோளாறை இருப்பதை கண்டறிந்தார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில், பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இண்டிகோ விமானத்தில் திடீர் கோளாறு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - Mechanical Failure
பெங்களூரு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 133 பயணிகள் உயிர் தப்பினர்.
இண்டிகோ விமானம்
விமானத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 133 பேர் பயணிக்க இருந்த நிலையில், தக்க நேரத்தில் இயந்திர கோளாறை விமானி கண்டறிந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மாலை வரை இயந்திரக் கோளாறை பழுது நீக்கும் பணி தொடர்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க:வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி!