தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடுபாதையில் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு - உயிர்தப்பிய 277 பேர்! - சென்னை

சென்னையிலிருந்து பேங்காக் செல்லவிருந்த விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைக் உணர்ந்த விமானியால் 277 பேர் உயிர் தப்பினர்.

Mechanical disorder in flight

By

Published : Nov 20, 2019, 1:00 PM IST

சென்னையிலிருந்து பேங்காக் நாட்டிற்கு 268 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 277 பேருடன் செல்லவிருந்த தாய் ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது அந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனை கவனித்த விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினாா். பின்பு இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான பொறியாளா்கள் இயந்திரக் கோளாறை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களாலும் அதை சரிசெய்ய முடியாததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் சென்னை நகரிலிலுள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமானம் நாளை அதிகாலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பறப்பதற்கு முன்பாகவே இயந்திரக் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் 277 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதையும் படிங்க:

சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details