தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தி திணிப்பை எதிர்த்து மதிமுக எப்போதும் போராடும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்தி திணிப்பை எதிர்த்து மதிமுக எப்போதும் போராடும் என்றும், தமிழ்நாடு ஆளுநர் போட்டி அரசியல் நடத்துவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து மதிமுக எப்போதும் போராடும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இந்தி திணிப்பை எதிர்த்து மதிமுக எப்போதும் போராடும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

By

Published : Oct 6, 2022, 10:39 PM IST

சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிலையச்செயலாளர் துரை வைகோ உட்பட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பு செய்வதாகவும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்கள்.

பின் வைகோ, ஏற்கெனவே இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் உறுதியாகப் போராடிய நிலையில், எப்போதும் மதிமுக தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்து போராடுவதாக தெரிவித்தார்.

'சர்வாதிகார அடிப்படையில் பிரதமர் பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் போட்டி அரசியல் நடத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது ஆளுநர் ஏன் ஆலோசனை நடத்துகிறார்.

ஆளுநர் பதவி வேண்டாம் என கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தேன். பல தேசிய இனங்களைக் கொண்டது தான் மத்திய அரசு. மத்தியில், மாநிலத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பு இருக்காது' எனப் பேசினார்.

இதையும் படிங்க:கலவரம் நடைபெறவில்லை என்றால் அது ஆர்எஸ்எஸ் பேரணியே கிடையாது; டிகேஎஸ் இளங்கோவன்

ABOUT THE AUTHOR

...view details