இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் 86 விழுக்காடு, விக்கிரவாண்டி தொகையில் 62 விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணியினரை திணறடிக்கும் வகையில் நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் மாபெரும் வெற்றி பெறும்.
'தமிழீழ விடுதலைப் புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தில் சரியான வாதங்களை எடுத்து வைப்பேன்' - ஸ்டாலின் பற்ரி வைகோ
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் தடை குறித்த தீர்ப்பாயத்தில் என்ன வாதங்களை எடுத்து வைக்க வேண்டுமோ, அதை முறையாக முன்வைப்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதியளித்துள்ளார்.
வைகோ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை குறித்து நடைபெற்ற தீர்ப்பாயத்தில் டெல்லி, சென்னை, மதுரையில் பங்கேற்றேன். மத்திய அரசு ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் வழக்கை 30ஆம் தேதி டெல்லியில் நடத்துவதாகக் கூறி இருக்கிறார்கள். என்னுடைய வாதத்தை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். என்ன வாதங்கள் எடுத்து வைக்க வேண்டுமோ அந்த வாதங்களை முறையாக எடுத்து வைப்பேன் என்றார்.
இதையும் படிங்க:அமித் ஷாவின் கருத்து அச்சத்தையும் ஆபத்தையும் தருகிறது - வைகோ