தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் - வெளியுறவுத்துறைக்கு வைகோ கடிதம் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை அழைத்து வரக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

MDMK leader vaiko
vaiko letter to central minister jaishankar

By

Published : May 31, 2020, 3:20 PM IST

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ”அயல்நாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன்படி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு விமானங்கள் மட்டுமே வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர். உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது.

அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை, மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விமானங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. பன்னாட்டு விமானங்கள் பறக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகின்றது. தாங்கள் இந்த பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தி, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தமிழர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், பன்னாட்டு விமானங்கள் பறக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒரு வருடத்தை நிறைவு செய்த மோடி 2.0: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details