இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 18ஆம் தேதி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓய்வில் வைகோ - நியூட்ரினோ எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் ஒத்திவைப்பு!
சென்னை: உடல்நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஓய்வில் இருப்பதால், தேனியில் நடைபெற இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பரப்புரை நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படியும் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெறவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பரப்புரைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.