மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இதய பீடமான நாடாளுமன்றத்தில் இதைக் குறித்து விவாதிக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. இரண்டு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக வாதங்கள் நடைபெறவில்லை.
கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை கொடுத்துள்ளார். ஜனநாயகத்தில் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதைக் குறித்து பேச வேண்டும். ஏராளமான மக்கள் வீடு வாசல் இழந்து உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் பரிதவித்துவருகின்றனர்.
தாம்பரம் சானிடோரியத்தில் 35 ஆண்டு காலமாக இருந்துவந்த தேவாலயம் அடியோடு இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிய சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல. ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்" எனக் கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதையும் படிங்க... ‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்