இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் மனதில் அச்சத்தையும், கவலையையும் போக்கி நம்பிக்கையை ஊட்ட வேண்டும். இது ஆளும் கட்சியும், அரசும் மட்டுமே செய்துவிட முடியாது. அனைத்து கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஒன்றுபட்டு தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும்.
‘அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்’ - வைகோ வலியுறுத்தல் - mdmk general seceratry vaiko
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சரியான யோசனை சொல்லி இருக்கிறார். நெருக்கமாக அமராமல் தனித்தனி இருக்கைகளை ஏற்பாடு செய்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது காணொலி சந்திப்பு (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்தலாம்.
இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு, நம்பிக்கை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.