திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் நேற்று (மார்ச் 10) மாலை கையெழுத்தானது.
அதன்படி, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி)ஆகிய 6 தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.