தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் இட ஒதுக்கீடு: அமைச்சர் ஆலோசனை - எம்.பி.பி.எஸ் இட ஒதுக்கீடு

சென்னை: நீட் தேர்வில் தகுதி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Minister K. A. Sengottaiyan
MBBS seats for government school student

By

Published : Jun 7, 2020, 7:21 PM IST

தமிழ்நாட்டின் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையிலும் சுற்றுப்புறம் மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாளை (ஜூன் 8) முதல் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் தேர்வுக்கான மற்ற பணிகளும் துவங்கவுள்ளன.

இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஓரிருநாளில் முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்க இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்தும் முதலமைச்சரை சந்திக்கலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க:உடல் வெப்பநிலை 37°C-க்கு மேல் இருந்தால் பொதுத்தேர்வு எழுத முடியுமா?

ABOUT THE AUTHOR

...view details