சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி முதல் நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வும், 28ஆம் தேதி 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை (பிப். 14) முதல் தொடங்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம், 'மாணவர்களுக்கு கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளையும், தங்கும் விடுதிகளை நடத்த வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.