சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பின எனவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் வெளிநாட்டினருக்கான ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களில் 87 இடங்கள் காலியாக உள்ளதாகவும், பல் மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87 இடங்களும் நிரம்பாமல் உள்ளன என மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் சுற்று கலந்தாய்வின் இறுதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது. நிர்வாக ஒதுக்கீட்டில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்களில் சேராமல் 82 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை.
தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87
இடங்களும் காலியாக உள்ளது என மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் ஒன்று முதல் 25,856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் ஒன்று முதல் 13,179 பெற்ற மாணவர்களும் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 119 இடங்களும், என்ஆர்ஐ மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட 648 இடங்கள் காலியாக உள்ளன. 767 இடங்கள் காலியாக இருந்தது.
பிடிஎஸ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 818 இடங்களும் காலியாக உள்ளன. இதற்கு முன் 903 இடங்கள் காலியாக இருந்தது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அனைத்து இடங்களும் நிரம்பியது. நிர்வாக ஒதுக்கீட்டில் என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடத்தில் சேராததால் இருந்த இடங்களில் சேராமல் 82 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் காலியிடங்கள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 156 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 87 இடங்களும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .