நடப்பாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூலை 2 ஆம் தேதி) வெளியிடுவதற்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இதற்கு தேவையான அளவில் தரவரிசைப் பட்டியலையும் தயார் செய்தது. ஆனால், அகில இந்திய மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடத்தப்படும் கால அட்டவணை மாற்றப்பட்டதால், தரவரிசைப்பட்டியல் வெளியாகாது என்றும் மூன்று நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு எப்போது? - மாணவர்கள் குழப்பம்
சென்னை: அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு தேதியினை இந்திய மருத்துவ கவுன்சில் நீட்டித்துள்ளதால், நாளை (ஜூலை 2 ந் தேதி ) வெளியிடவிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் மூன்று நாட்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தரவரிசை பட்டியல்
இந்நிலையில், அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இடம்பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான காலக்கெடு ஒன்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்களின் வசதிகேற்ப, தரவரிசைப் பட்டியல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதல்கட்டக் கலந்தாய்வு நடைபெறும் தேதியும் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.