மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள இன்று செய்திக் குறிப்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற கலந்தாய்விற்கு 450 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் கலந்தாய்வில் 436 மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 363 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 51 இடங்களையும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 இடத்தையும் என 418 இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
14 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர். 2 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர்.அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 859 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 945 இடங்களும்,பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 146 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 985 இடங்களும் காலியாக உள்ளன.