தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு! - chennai district news

சென்னை: 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்

By

Published : Jan 5, 2021, 6:46 AM IST

நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டு முதல் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசால் அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2020 நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 399 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 47 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதுவரை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அனைத்து உயர்கல்வி பிரிவுகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு'

ABOUT THE AUTHOR

...view details