தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை ரத்தாகிறதா எம்பிபிஎஸ் கலந்தாய்வு? - mbbs counseling news

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கு 17 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால் நாளை காலை 9 மணிக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு வந்தால் போதும் எனவும், காலை 11 மணி, 2 மணி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு அழைப்பு ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

mbbs counseling canceled
நாளை நடைபெறவிருந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு ரத்து

By

Published : Dec 11, 2020, 8:58 PM IST

சென்னை:எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கு 17 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதால் காலை 9 மணிக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு வந்தால் போதும் எனவும், காலை 11 மணி, 2 மணி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு அழைப்பு ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ள தகவலில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்விற்கு 452 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில், 436 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். 16 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரியில் 185 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் 143 இடங்கள், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவ கல்லூரியில் 13 இடங்கள் என 341 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 9 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 85 மாணவர்கள் தங்களுக்கான தரவரிசை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.

எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 90 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 59 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 38 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரியில் 896 இடங்களும் காலியாக உள்ளன.

மேலும், எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயற்கை மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக்கல்லூரி ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கு காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்கு 120 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் பிரிவில் 17 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எனவே டிசம்பர் 12ஆம் தேதி காலை 11 மணி, 2 மணிக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை ரத்து செய்யப்படுகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:’மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details