தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சொத்து வரி செலுத்தவில்லை: மேயர் பிரியா கூறிய பதில்? - chennai news

சொத்து வரி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் வழக்குகளைக் காரணம் காட்டி வரி செலுத்தாமல் இருப்பதைக் களையச் சிறப்பு சட்ட குழுவை அமைக்க வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சொத்து வரி செலுத்தவில்லை
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சொத்து வரி செலுத்தவில்லை

By

Published : Dec 28, 2022, 10:38 PM IST

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகரன், தணிக்கை ஆய்வின் பொழுது மண்டலம் 11ல் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா தனியார் மருத்துவமனை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி 2016 ஆம் ஆண்டு முதல் தற்போதைய நிதி ஆண்டு வரை 7 கோடியே 15 லட்சத்து 54 ஆயிரத்து 681 வரை சொத்து வரிகளை செலுத்தாமல் உள்ளனர் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும் பிறகும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிடம் சொத்து வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. ஒருவேளை மேல்முறையீடு செய்து இருந்து, வரி வசூல் செய்வதில் தடை ஏதும் பெறாமல் இருந்தால் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு வரி வசூலிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

மேலும் வழக்கைக் காரணம் காட்டி வரி செலுத்தாமல் உள்ளவர்களின் வழக்குகளைக் கையாள சிறப்புச் சட்ட குழுவை உருவாக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சென்னை மேயர் பிரியா, "ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை இந்த ஆண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தி உள்ளனர். அதற்கான ஆதாரம் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கணக்கு குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். வாரம் தோறும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் நிலுவை வழக்குகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆகையால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டிக்கு பிளானா? முதலில் இதை படிங்க!

ABOUT THE AUTHOR

...view details