தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் கொலை - மேலும் இருவர் கைது - Mayilapur youth Murder cctv

மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் கொலை
முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் கொலை

By

Published : Aug 2, 2021, 7:20 PM IST

சென்னை: மயிலாப்பூர் ரயில் நிலையம் டாஸ்மாக் கடை எதிரே நேற்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் சரவணன் என்ற இளைஞர் ஆறு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரை நேற்று கைது செய்தனர்.

விசாரணை

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்த கும்பலை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், சரவணனுக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் கட்டப்பஞ்சாயத்து மூலம் இரு கும்பலும் சமாதானமாக சென்றனர்.

சிசிடிவி காட்சி

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சரவணனுக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணன் மணிகண்டனை கேலி செய்ததாக தெரிகிறது.

இதற்கு பழிவாங்கும் வகையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் விஜய், அஜித், ஷாம் ஆகியோருடன் சேர்ந்து சரவணனை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மணிகண்டன், ஷாம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) விஜய், அஜித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரிக்‌ஷாவில் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு - சிசிடிவி வைரல்

ABOUT THE AUTHOR

...view details