தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நெருக்கடி: பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மே மாதம் ஊதியம் வழங்க கோரிக்கை! - teachers requests to cm

சென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன்

By

Published : Jun 14, 2020, 7:24 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2011-12ஆம் கல்வியாண்டில் 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். பல ஆள்குறைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது 12 ஆயிரத்து 500 பேர் மட்டுமே மாதம் 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய அரசின் பரிந்துரைப்படி, தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு இதுவரை அளிக்காததையும், இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும், 12 ஆயிரத்து 500 பகுதி நேர ஆசிரியர்களுக்கு 9 ஆயிரத்து 200 ரூபாய் ஊதியம் வழங்க ஜூன் 12 ஆம் தேதி (12-6-2020) உத்தரவிட்டிருக்கிறது. இதுபோன்ற எவ்வித பணப் பலன்களும் இல்லாமல் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்களுக்கு தொடர்ந்து ஆண்டுதோறும் மே மாத ஊதியம் மறுக்கப்பட்டு வருவதை கைவிட்டு உடனடியாக, மே மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் வெளியிட்ட காணொலி

பள்ளிக் கல்வித்துறை பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேமிக்கும் அளவு ஊதியமில்லாமலும், கையிருப்பும் கரைந்து இந்த கரோனா ஊரடங்கில் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆர்எம்எஸ்ஏ பல நிதி ஆதார தொகுப்பில் செலவிடப்படாமல் நிதித்துறைக்கு திருப்பி ஒப்படைக்கும் செலவிடப்படாத நிதி அல்லது உபரி நிதி தொகுப்பிலிருந்து இந்தப் பேரிடர் காலத்தில் மே மாத ஊதியம் வழங்கிடவேண்டும்” எனக் தெரிவித்திருந்தார்.

பள்ளிக் கல்வித்துறையைத் தவிர பிற துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு படிப்படியாக பணிநிரந்தரம் சாத்தியமாகும் நிலையில், ஒன்பது ஆண்டுகளாக மாணவர்களுக்கு உடற்கல்வியும், கலையும், தொழில்நுட்பத்தையும், இசையையும் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு கருணை காட்டவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வறுமைக்கு காரணம் கரோனா... 15 வயது சிறுவனின் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details