தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

By

Published : May 17, 2021, 7:01 AM IST

1. டவ் தே புயல் காரணமாக குஜராத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!

டவ் தே புயல் எதிரொலி காரணமாக இன்றும், நாளையும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

2. இன்று முதல், இ - பதிவு முறை அமல்!

தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய, 'இ- பதிவு' முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இ - பதிவு முறை அமல்

3. காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் இன்று தேர்ந்தெடுப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெறவுள்ளது. ஓட்டெடுப்பு வாயிலாக, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் யார் என்பது தெரியவரும்.

காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர்

4. இன்று முதல் மின்சார ரயில் சேவை குறைப்பு!

கரோனா தொற்று பரவல் காரணமாக ரயிலில் பயணிகள் அதிகளவில் பயணம் செய்யாததால், இன்று முதல் சென்னையில் மின்சார ரயில் சேவை 205ஆக குறைப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

5. டிஆர்டிஓ தயாரித்த தடுப்பு மருந்து இன்று முதல் பயன்பாடு!

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள ‘2-டிஆக்சி டி குளூக்கோஸ்’ என்னும் மருந்து இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

டிஆர்டிஓ தயாரித்த தடுப்பு மருந்து

ABOUT THE AUTHOR

...view details