தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த தனியார் பள்ளிகளை ஜூன் முதல் ஆய்வு செய்யலாம்!

சென்னை: தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்த பள்ளிகளை ஜூன் மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்யலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளி

By

Published : May 28, 2019, 9:39 PM IST

தனியார் பள்ளிகள் முன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது உரிமத்தினை புதுப்பிக்க வேண்டும். எனவே தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் அதிகாரத்தினை அரசு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே தொடர் அங்கீகாரம் வழங்கும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. அதில் ஏபரல் 28ஆம் தேதி முதல் 2,915 தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகாரத்திற்காக வின்ணப்பித்துள்ளனர்.

இதில் 1,621 மெட்ரிக் பள்ளிகளுக்கான விண்ணப்பம் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், 205 விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகத்திலும் பெறப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அலுலவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த உடனே நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட முதன்மமை கல்வி அலுவலர்கள் ஆன்லைனில் உள்ள விபரங்களை சரிபார்த்து அந்த பள்ளிக்கு நடைமுறையில் உள்ள விதிகளின் படி அங்கீகாரம் வழங்கலாம்.

அங்கீகாரம் தொடர்பான பணிகளை ஜூன் மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இதனால் அந்த பள்ளி மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு, பேருந்து லைசென்ஸ், பஸ்பாஸ் உள்ளிட்ட இதர சலுகைகளை பெற ஏதுவாக அமையும். மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் செயல்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கன்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details