தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் சுமார் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி மற்றும் மூன்றாண்டுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வந்தது.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அங்கீகாரத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பம் - அங்கீகாரம்
சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டது. 2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 101ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது ஆவணங்களை சரிபார்த்து தொடர் அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.
சில இடங்களில் தொடர் அங்கீகாரம் அளிப்பதில் புகார்கள் வந்தன. அதுபோன்ற புகார்களை முற்றிலும் தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அங்கீகாரம் அளிக்கும் முறையை மெட்ரிகுலேசன் இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த முறையினால் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். பள்ளியின் விண்ணப்பம் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.