தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் புகாரில் சிக்கிய காவல் உயர் அலுவலரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - பெண் ஐபிஎஸ்

பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி (காவல் துறை உயர் அலுவலர்) மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 10, 2021, 4:39 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக காவல் துறை உயர் அலுவலர் மீது பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் உள் துறை பொறுப்பு வகிக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஜே.கே. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல் துறை உயர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவல் துறை உயர் அலுவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், சேலம் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதனையும் படிங்க: இனிவரும் அரசு எதுவாக இருந்தாலும் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details