சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பணிபுரியும் மூத்த அலுவலர்கள் 12 பேர், பல்வேறு துறைகளில் பணிபுரியும் 63 பேர் என நேற்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 75 பேருக்கு கரோனா? - corporation workers diagnosed with corona
சென்னை: மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா
இதையடுத்து, மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், ஊழியர்கள் பணிபுரிந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அந்த பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.