தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா 3ஆம் அலை திகில்... சென்னையில் மாஸ்க் அணிபவர்கள் எண்ணிக்கை உயர்வு - Mask-Wearing Increased in chennai

சென்னை: கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திற்குப் பின்னர் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஐசிஎம்ஆர் சென்னையில் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

mask
மாஸ்க்

By

Published : Jul 17, 2021, 3:54 PM IST

கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக முகக்கவசம் அணிவதும், தனிநபர் இடைவெளி கடைப்பிடிப்பதும் கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்துவருகின்றனர்.

இந்நிலையில், சென்னைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதின் நிலை குறித்து ஐசிஎம்ஆர் களஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முகக்கவசம் அணிபவர்கள் எண்ணிக்கை

(கரோனா இரண்டாம் அலைக்குப் பின்)

தேதி இடம் ஆய்வு
ஜூலை 8 முதல் 10

சென்னை

(பொது இடங்கள்)

3,200 நபர்கள்

சென்னை

(64 தெருக்கள்)

முகக்கவசம் அணிந்தவர்கள்

(%)

முகக்கவசம் அணியாதவர்கள்

(%)

குடிசைப் பகுதிகள் 41 38 இதர குடியிருப்புப் பகுதிகள் 47 25 முழுவதும் அடைக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் 24 39 குடிசை அல்லாத இதர அடைக்கப்பட்ட பகுதிகள் 33 34

இந்த ஆய்வில் சென்னையில் முகக்கவசம் அணிபவர்களில் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு சுமார் 1630 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் துவண்ட வண்டலூர் பூங்கா: இணையம் மூலம் பார்க்க ஆர்வம் காட்டும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details