மதிமுகவின் 28 ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கமதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி வைத்தார்.
கரோனா தடுப்பு பணியில் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் சரியே - வைகோ
சென்னை: கரோனா தடுப்பு பணியில் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் சரியே என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மதிமுக இன்று, 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. . இன்னும் பல ஆண்டுகள் வாழையடி வாழையாக மதிமுக வளர்ந்து நிற்கும். தமிழ்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே" என கூறினார்.
நிகழ்வின் போது கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சுப்பிரமணியன், மகேந்திரன், மதிமுக எம்எல்ஏக்கள் சின்னப்பா, டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சதன் திருமலைக்குமார் பகுதி செயலாளர்கள் தென்றல் நிசார், நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.