தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண மண்டபத்தில் தீ விபத்து: ஒருவர் காயம் - சென்னையில் தீ விபத்து

வியாசர்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Sep 18, 2021, 12:13 PM IST

சென்னை வியாசர்பாடி சர்மா நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது நடேசன் திருமண மண்டபம். இத்திருமண மண்டபத்தில் நேற்று (செப். 17) நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே மின் கோளாறு காரணமாகத்தீ விபத்து ஏற்பட்டது.

அவ்விபத்தில் சிக்கி ஒருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

இச்சம்பவம் குறித்து மண்டபத்தின் உரிமையாளரிடம் உறவினர்கள், பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதற்கு உரிமையாளர் தகவல் கொடுத்தவர்களிடம், தகாத வார்த்தைகள் பேசியது மட்டுமின்றி தீ ஏற்பட்டதற்கான விளக்கத்தையும் கொடுக்க மறுத்தார்.

தீ விபத்து

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மண்டபத்தின் உரிமையாளரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சாலை மறியல் ஈடுபட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், பொது மக்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர். மேலும் இது தொடர்பாக எம்.கே.பி. நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:உரத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details