தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடைத்தாளை சரியாக பூர்த்தி செய்யாவிட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய நடைமுறை

சென்னை
சென்னை

By

Published : Dec 30, 2020, 3:18 PM IST

Updated : Dec 30, 2020, 3:40 PM IST

15:11 December 30

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு எழுதுபவர்கள் விடைத்தாளை சரியாக பூர்த்தி செய்யாவிட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்புகிறவர்கள் முக்கிய அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். காலை 9:15 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.  

காலை 9:15-க்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது.  

விடைத்தாளில் உரிய இடங்களில் (இரண்டு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் உடைத்தால் எந்த வகையிலும் சேதமடையாமலும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.  

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் விடைத்தாளில் E என்ற வட்டத்தை கடுமையாக்க வேண்டும். விடைத்தாளில் A,B,C,D மற்றும் E என்ற ஒவ்வொரு வினாக்கும் எத்தனை வட்டங்கள் கருமை ஆக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். எண்ணிக்கை தவறும் பட்சத்தில் தேர்வில் பெறும் மதிப்பெண்ணிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆதலால் இதனை கவனமுடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்தச் செயலைச் செய்வதற்கு மட்டும் ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது மதியம் ஒரு மணி முதல் 1.15 மணி வரை இந்த செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளினை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வர்கள் நலனுக்காகவும் எவ்வித தவறும் நடைபெறாமல் தவிர்க்கவும் தேர்வாணையத்தால் இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Last Updated : Dec 30, 2020, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details