தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மார்க்கெட்டுகள் விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக துணை முதலமைச்சர் உறுதி' - சென்னை செய்திகள்

சென்னை: தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மார்க்கெட்டுகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.

விக்ரமராஜா
விக்ரமராஜா

By

Published : Jul 14, 2020, 4:06 PM IST

தமிழ்நாடு முழுவதும் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகள் கரோனா தொற்று காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அனைத்து மார்க்கெட்டுகளையும் விரைவில் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசிடம் வணிகர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் நாளை மறுநாள் (ஜூலை 16) வணிகர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மார்க்கெட்டுகளும் விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக நாளை மறுநாள் (ஜூலை 16) நடைபெறவிருந்த வணிகர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது காய்கறி சந்தைகளில் காய்கறிகள் வாங்குபவர், விற்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் கண்டிப்பாக தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details