தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெர்சல் காட்டும் மெரினா: பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி! - தமிழ்நாடு அரசு

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திற்குப் பின் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

By

Published : Dec 14, 2020, 12:02 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும், மெரினா கடற்கரை மக்கள் செல்வதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவந்தது.

மெரினா கடற்கரை

இந்தத் தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? எனக் கேள்வி எழுப்பியது. மேலும், கடற்கரை திறக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றமே திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தது.

இதனையடுத்து, டிசம்பர் 14ஆம் தேதி பொதுமக்களுக்கு மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த, நவம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி டிசம்பர் 14ஆம் தேதிமுதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

மெரினாவில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்களா? தகுந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதை காவல் துறையினரும், மாநகராட்சி அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

மெரினா கடற்கரையில் மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் 500 ரூபாயும், முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும் அபராதம் வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை மெரினா கடற்கரை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்து நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

எட்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மெரினா கடற்கரை

எட்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மெரினா கடற்கரையில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என மெரினாவைச் சுற்றிப் பார்க்கவந்த ஆண்டனி கூறினார்.

இதுதொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். என்னதான் நண்பர்களுடன் மற்ற இடத்துக்குச் சென்றாலும் கடற்கரையைப்போல் எதுவும் வராது, தற்போது மெரினா கடற்கரை திறந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்!

ABOUT THE AUTHOR

...view details