தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி: காத்து வாங்கும் மெரினா!

சென்னை: கரோனா வைரஸ் காரணமாக மெரினா கடற்கரை மூடப்பட்டதால் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடிய மெரினா
வெறிச்சோடிய மெரினா

By

Published : Mar 21, 2020, 11:43 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இன்று மதியம் 3 மணியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கடற்கரைகளும் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்தது.

இந்நிலையில், சென்னையில் மக்கள் கூடும் இடமான மெரினா கடற்கரை, சர்வீஸ் சாலை மூடப்பட்டு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் சிலர் கடற்கரைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் ஜெட் ராட் இயந்திரம் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக இயற்கைப் பேரிடர்கள், அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றால் மட்டுமே கடற்கரைக்குப் பொதுமக்கள் வர தடை விதிக்கப்படும்.

வெறிச்சோடிய மெரினா

ஆனால், தற்போது கரோனா பாதிப்புக்காக மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட் -19: நீலகிரி மாவட்டத்தில் இலவச முக கவசங்களை வழங்கிய எஸ்.பி

ABOUT THE AUTHOR

...view details