தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டினபாக்கம் டூ பெசன்ட் நகர் சாலையை மீண்டும் தொடங்குவதற்கு ஆய்வுசெய்ய உத்தரவு!

சென்னை: அடையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பட்டினபாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான சாலையை மீண்டும் தொடங்க முடியுமா என ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க மாநகராட்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

find new rout for free traffic between pattinapakkam to adayar
find new rout for free traffic between pattinapakkam to adayar

By

Published : Feb 21, 2020, 2:31 PM IST

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளுக்கு எதிராக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில் 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் 66 லட்சம் ரூபாய் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், லூப் ரோட்டில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு, கொடுக்கப்பட்ட மாற்று இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே ஒதுக்கப்படவிருக்கும் இரு ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கர் மார்க்கெட் அமைக்கப்பதற்கும், இன்னொரு ஏக்கர் பார்க்கிங் வசதிக்கும் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார். புதிதாகக் கட்டப்படவுள்ள மார்க்கெட்டில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து விற்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடை மாற்றம் தொடர்பாக மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடையார் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரை சேதமடைந்த சாலைப் பகுதிகளில் மீண்டும் போக்குவரத்தைத் தொடங்க மாநகராட்சி ஆய்வுசெய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:'வெறி நாய்க்கடி நோய் இல்லாத மாநகரம்' - சென்னை மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள்

ABOUT THE AUTHOR

...view details