தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிர்ச்சி... கறுப்பு நிறமாக மாறிய மெரினா - ஏன் தெரியுமா?

சென்னையில் மழைக் காரணமாக ஆறுகள் நிரம்பி, வெள்ள நீருடன் சாக்கடை கழிவுகளும், குப்பைகளும் அதிகளவு மெரினாவில் கலந்து கறுப்பு நிறமாக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.

மெரினா
மெரினா

By

Published : Nov 7, 2021, 7:04 PM IST

சென்னை:வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை சாலைகளில் வெள்ள நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் மழை பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக மெரினா கடலின் நிறம் கறுப்பு நிறமாக மாறியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தேடுகையில், கழிவு நீரும் தீபாவளி பட்டாசுகளும் தான் என்று தெரியவந்துள்ளது. அதாவது, சென்னையில் கனமழை பெய்து வருவதால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் அதிகளவு நீர் வெளியேறி, அதனுடன் சாக்கடை கழிவுகளும், குப்பைகளும் அடித்துச் செல்லப்பட்டு மெரினாவில் கலந்துள்ளதே நிறமாற்றத்திற்கான காரணமான எனத் தெரியவந்துள்ளது.

இது தவிர தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளும் கடலில் கலந்துள்ளதால் மெரினா கடலின் நிறம் மாறியுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details