அகில இந்திய சிட்பண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மெட்ராஸ் மேலாண்மை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கி நிர்வாக வாரியத்தின் இயக்குனர்களில் ஒருவரான எஸ்.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிட் பண்ட் துறையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த துறையில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முக்கிய பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இதனை அடுத்து சிட் பண்ட் துறையில், ஆண்டுக்கு 11 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டி சாதனை படைத்த மர்கதரிசி சிட் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரணுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்.