தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் தேர்தலுக்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதால், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 3ஆம் தேதிவரை மட்டுமே விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்திசெய்து அளிக்க முடியும் என அதன் தலைமை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தக் கால அவகாசம் மார்ச் 5ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!