மேஷம்:சில குறிப்பிட்ட காரணத்தினால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கும். அதனால், உங்கள் உடமை மீது சிறிது பயம் ஏற்படக்கூடும். அன்பால் உறவுகள் மலரும். திருமண வார்த்தை செழிப்புறும்.
ரிஷபம்:இன்று, நீங்கள் சிறிய பயணத்தை மேற்கொள்ளலாம். பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். அதனால், மனம் சிறிது வருத்தம் அடையலாம். திட்டங்களை முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுத்துதல் நன்மையை கொடுக்கும். அதனால், குழப்பமின்றி அந்த நாள் அமைய உதவும். பயணத்தின் மாற்றங்கள் நன்மை தரும். அதன் காரணமாக, உங்கள் பயணம் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அமையும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்:நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவது உடன், மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால், மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் உங்கள் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்: உங்கள் கற்பனை திறனை அதிகரிக்கக் கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். உங்களின் கௌரவம் அதிகரிப்பதுடன், உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கப் பெறலாம் (முயற்சிக்கான பலங்கள் கிடைக்கும்). படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம்.
சிம்மம்: இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கலாம். நீங்கள் பதட்டங்களும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். அலுவலகப் பணிக்கு வீட்டிற்கும் இடையே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
கன்னி:இன்று நீங்கள் எந்த செயல் செய்தாலும், அதில் சிறந்து விளங்கக்கூடிய நாளாக அமையும். நீங்கள் வெகு நாட்களாக வெளிநாட்டு வியாபாரம் செய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்கள் தோற்றத்தையும், ஆளுமையையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்தல் அவசியமாகும்.