சென்னையை அடுத்த ஆவடியில் தனியார் பள்ளி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண், பெண்கள் என சுமார் 1,500 வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் புல்வாமா தாக்குதலுக்கு நிதி திரட்ட மாரத்தான் போட்டி! - ஒட்டப்பந்தயம்
சென்னை: ஆவடியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
சென்னையில் புல்வாமா தாக்குதலுக்கு நிதி திரட்ட மாரத்தான் போட்டி!
இதில் சிறப்பு விருந்தினராக அபிராமி ராமநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்த போட்டியின் மூலம் ஈட்டப்படும் தொகையின் ஒரு பகுதியை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு வழங்குவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.