தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு அரசு பணிநியமனம், விருது வழங்குதல் நிகழ்ச்சி : முதலமைச்சர் பங்கேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.3.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

By

Published : Mar 8, 2022, 10:55 PM IST

தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசு பணிநியமனம், விருது வழங்குதல் நிகழ்ச்சி : முதலமைச்சர் பங்கேற்பு
தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசு பணிநியமனம், விருது வழங்குதல் நிகழ்ச்சி : முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.3.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

பல்வேறு விருதுகள் வழங்கல்

தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசு பணிநியமனம், விருது வழங்குதல் நிகழ்ச்சி : முதலமைச்சர் பங்கேற்பு

மேலும், 2020-21 ஆம் ஆண்டிற்கான “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" , வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு, ரூ.1லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் ஆகிய மதிப்புடைய பணத்திற்கான காசோலையுடன் விருதுகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை - உழவர் நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செ. ராமசாமி அவர்களுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதிற்கான ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றையும், வேலூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மா. குமார் அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. ச. சிதம்பரம் ஆகியோருக்கும் காந்தியடிகள் காவலர் பதக்கத்திற்கான சான்றிதழ் மற்றும் தலா ரூ.40 ஆயிரம் பணத்திற்கான காசோலை மற்றும் பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசு பணிநியமனம், விருது வழங்குதல் நிகழ்ச்சி : முதலமைச்சர் பங்கேற்பு

காலியான அரசுப் பணியிடங்கள் நிரப்பம்

அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த ஆண்டு நடந்த முடிந்த குடியரசு தின விழாவில், கரோனா பெருந்தொற்று காரணமாக விழாவில் கலந்து கொள்ள இயலாத விருதாளர்களான - சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீ. முத்துகிருஷ்ணன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் ச. லோகித், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. அசோகன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி சி. சுதா (எ) பேச்சியம்மாள் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்திற்கான சான்றிதழ், தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் ஆகியவற்றை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

இதையும் படிங்க:உக்ரைனில் இருந்து உடனே... உடனே வெளியேறவும் - இந்தியத் தூதரகம்


ABOUT THE AUTHOR

...view details