சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டபேரவைக்கு திருப்பி அனுப்பியதை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய ஒரு சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவற்றில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் மசோதாக்களில், கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பதற்கான கூட்டுறவுச் சங்கச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட மசோதாவும் உள்ளடங்கும்.
ஏனெனில், 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான இயக்குநர்கள் அதிமுக பிரதிநிதிகளாக இருப்பதால், தற்போதைய திமுக அரசு அந்த திருத்தச் சட்டத்தை கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
தற்போதைய திமுக அரசு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. ஏனெனில் தற்போதுள்ள சங்க இயக்குநர்கள் போலி நகைகள் மீது கொடுக்கப்பட்ட கடன் உள்ளிட்ட நிதிகளில் பெரிய அளவில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆறு கூட்டுறவு வங்கிகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின்பேரில், சம்பத்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவுத்துறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது.