சென்னை மாநகராட்சிக்குள்பட்ட கோயம்பேடு முதல் பாடி வரை உள்ள பாதாள சாக்கடைகளைச் சுத்தம்செய்யும் பணியில் இயந்திரங்களுக்குப் பதிலாக மனிதர்களைப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
உத்தரவை மீறி பாதாள சாக்கடைகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வது ஏன்?
சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி பாதாள சாக்கடைகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வது ஏன்? என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய இயக்குநர், சென்னை மாநகராட்சி பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Manual scavenger indulged in Chennai, HRC issued notice to sewage board
மேலும், போதிய கருவிகள் இருந்தாலும், பழுது காரணமாக மனிதர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், இது குறித்து குடிநீர் வழங்கள் மற்றும் கழுவுநீர் அகற்று வாரிய இயக்குநர், சென்னை மாநகராட்சி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.