தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video:'அசின் போட்ட ஸ்டெப்... மோடி குறித்த பேச்சு...' - பேரரசுவை Thug Life செய்த மன்சூர் அலிகான்!

சென்னையில் டீல் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் ‘உங்க அம்மா எங்க அம்மா நம்ம சேர்த்துவைப்பாளா?’ என்ற பாடலை பாடி அவர் அருகே அமர்ந்திருந்த இயக்குநர் பேரரசுவை கிண்டலடித்துள்ளார்.

பேரரசுவை வச்சு செஞ்ச மன்சூர் அலிகான்
பேரரசுவை வச்சு செஞ்ச மன்சூர் அலிகான்

By

Published : Apr 25, 2022, 4:34 PM IST

சென்னை:இயக்குநர் சுனீசேகர் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் 'டீல்'. இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பேரரசு, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், 'இப்போது எல்லாம் டீல், பீஸ்ட், கேஜிஎஃப் என்று ஆங்கிலத் தலைப்புகள் தான் வருகின்றன.

கருணாநிதியைப் போல் தற்போது தூய தமிழில் படத்தலைப்பு வைக்கும் படங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் மோடியை, அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பீடு செய்தது தவறு என சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர் அருகே இருந்த இயக்குநர் பேரரசுவை பார்த்து, 'நான் பேசியதற்கு இப்போ... பேரரரசு மறுப்பு தெரிவிப்பார் பாருங்க' என கிண்டலடித்தார். மேலும், 'பேரரசு ஒரு சிறந்த லிரிக் ரைட்டர். அந்த காலத்திலேயே உங்க அம்மா.... எங்க அம்மா நம்ம சேர்த்துவைப்பாளா?' என இரட்டை அர்த்தத்தில் பாடினார்.

மேலும், 'அசின் போட்ட ஸ்டெப்பிலே எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டெப் இதுதான்', என அந்த ஸ்டெப்பிற்கு நடனமும் ஆடினார். தொடர்ந்து பேரரசுவை அவர் பேசக்கூறினார். அதற்கு பேரரசு ‘நான் என்ன பேசுறது அதான் நீயே பேசிட்டியே’ என்றார். 'பேசுங்க நான் மோடியைப் பற்றி தவறாகப் பேசியுள்ளேன். உங்களுக்கு கோபம் வரவேண்டாமா' என மன்சூர் நகைத்தார்.

பேரரசுவை வைத்து செய்த மன்சூர் அலிகான்

தொடர்ந்து, 'இந்த தமிழ்ச்சமூகம் மற்ற மொழிப்படங்களையும் வரவேற்கும். நல்ல படமாக இருந்தால் தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். மொழி பிரச்னை எங்களுக்குள் கிடையாது’ எனக் கூறிவிட்டு வந்திருந்த எல்லாருக்கும் நன்றியைத் தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக வலதுசாரி சிந்தனையாளராக ட்விட்டரில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் இயக்குநர் பேரரசுவும், தமிழ்த்தேசிய சிந்தனையாளராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் நடிகர் மன்சூர் அலிகானும் அடுத்தடுத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கையில், மன்சூர் அலிகான் பேரரசுவை அரசியல் ரீதியாக கலாய்த்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'பயணிகள் கவனிக்கவும்’ தலைப்பிற்கு எழுத்தாளர் பாலகுமாரன் மகன் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details