தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒருபுறம் மகிழ்ச்சி,மறுபுறம் வருத்தம்...' - இல. கணேசன் - la ganesan

’ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற அடிப்படையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

இல. கணேசன்
இல. கணேசன்

By

Published : Aug 22, 2021, 1:37 PM IST

பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இல.கணேசன், "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்னை தொடர்புகொண்டு நான் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசன்

சூசகமாகக் கேட்ட பிரதமர்

நேற்றிரவு பிரதமர் என்னைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு என்ன பதவி வேண்டும் என சூசகமாகக் கேட்டார். பாஜக, கட்சி தொண்டர்களுக்கும் பதவி வழங்கி கௌரவபடுத்துகிறது.

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சியின் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆளுநராகப் பதவி ஏற்பேன். பாஜக கட்சியின் பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது.

இல கணேசன்

அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு தான் இதுவரை சென்றதில்லை. இருந்தாலும் ’ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற அடிப்படையில் அங்கும் சென்று பணியாற்றுவேன்" என்றார்.

இதையும் படிங்க:5 வயதிலே ஆர்எஸ்எஸ் பயிற்சி... மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை!

ABOUT THE AUTHOR

...view details