தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயோத்திதாசருக்கு மணிமண்டபம் - Manimandapam For iyothee thass

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Sep 3, 2021, 11:02 AM IST

Updated : Sep 3, 2021, 5:02 PM IST

16:57 September 03

175-வது ஆண்டு விழா நினைவாக - அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகின்றன. அதன்படி இன்று வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

இந்நிலையில் சாதி எதிர்ப்பு போராளி அயோத்திதாசருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

10:55 September 03

அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

அப்போது பேசிய அவர், “ திருவள்லுவர், அவ்வை, கபிலர் வரிசையில் அயோத்திதாச பண்டிதர் பெருமையை போற்றும் வகையில் தமிழன், திராவிடன், எனும் இரண்டு சொற்களை அறிவாயுதமாக கொண்டவர். 1891ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபையை தொடங்கி ஒரு பைசா தமிழன் எனும் இதழை நடத்தியவர்.

அவர் போட்டு கொடுத்த பாதையில்தான் தமிழ்நாடு அரசியல் செயல்படுகிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பன்மொழி புலவர், போராளி என பன்முக ஆற்றல் கொண்டவர்.

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும், மதமுமே தடை என முழங்கியவர். இதுபோன்ற புகழை போற்றும் வகையில் அயோத்திதாச பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வடசென்னை பகுதியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்” என்றார்.

Last Updated : Sep 3, 2021, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details