அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஸ்டாலினை புகழ்ந்து அவர் பாடல் ஒன்றை பாடினார்.
" ஏழு கோடி தமிழருக்கு சொந்தமல்லவா தலைவா " - ஸ்டாலினை புகழ்ந்து பாடிய மாணிக்க விநாயகம்! - புகழ்ந்து பாடிய
சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம், அவரை புகழ்ந்து பாடல் ஒன்றை பாடினார்.
ஸ்டாலினை புகழ்ந்து பாடிய மாணிக்க விநாயகம்
பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், "விடியல் வரும் என்று காத்திருக்கும் 7 கோடி தமிழர்களை போல் நானும் காத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம். தம்பி தளபதி முதலமைச்சராவார். உள்ளே அவரிடம் பாட்டு பாடி காண்பித்தேன் " என தெரிவித்தார்.