அரசாணையில், '2019-20ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 2,423 கௌரவ விரிவுரையாளர்களில் 2,120 பேருக்கு பணிக்காலத்தில் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது.
இதனால் மீதமிருந்த 303 கௌரவ விரிவுரையாளர்கள், பணி நியமன அனுமதி கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு மீதமிருக்கும் 303 கௌரவ விரிவுரையாளர்களையும் தற்காலிகமாக பணி நியமனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.