தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதியுதவி கோரி இசைக் கலைஞர்கள் வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மங்கல இசைக் கலைஞர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mangala isai musicians
Mangala isai musicians

By

Published : Apr 17, 2020, 4:25 PM IST

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்க அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தங்கள் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்க கோரி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:4 நாள்கள்... 4,000 கிமீ பயணம்... எங்களுக்கு சிரமங்கள் ஒரு பொருட்டல்ல; மக்களின் உணர்வுகள் தான் முக்கியம் - நெல்லை நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details