கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 28ஆம் தேதி எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கரோனா பரிசோதனை செய்துவிட்டு, அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். நேற்று வெளியான இப்பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
மாங்காடு சப் இன்ஸ்பெக்டருக்கு கரோனா உறுதி! - மாங்காடு சப் இன்ஸ்பெக்டருக்கு கரோனா உறுதி
சென்னை: மாங்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Mangadu sub inspecter tested positive for coronavirus
தற்போது அவர் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தங்கியிருந்த காவல் குடியிருப்பில் உள்ள 20 நபர்களை மதுரவாயல் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக கடந்த 7 மாதமாகப் பணிப்புரிந்து வரும் இவர், மதுரவாயல் காவலர் குடியிருப்பில் கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறார்.