தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்!

மாமல்லபுரத்திலிருந்து 180 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையில் மாண்டஸ்(mandous cyclone) புயல் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் !
மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் !

By

Published : Dec 9, 2022, 4:37 PM IST

சென்னை:மாண்டஸ் அதிபுயலில் இருந்து வலுவிழந்து, புயலாக மாறி மாமல்லபுரத்தில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடற்பகுதியில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது நள்ளிரவில் மணிக்கு 65-75 கி.மீ. வேகத்தில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடிய சூறாவளி புயலாக கிட்டத்தட்ட வடமேற்குத் திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தை (மகாபலிபுரம்) சுற்றி இன்று(நவ.9) இரவு 11:30 மணி முதல் நாளை(நவ.10) அதிகாலைக்குள் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக கனமழை மற்றும் ஒட்டிய வட உள்பகுதிகளில் தனித்தனியாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை(டிச.10) வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும்போது முதலில் அதிகமாக காற்று வீசும். பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும். இதனால் பொதுமக்கள் புயல் தொடர்பாக உத்தரவு வரும் வரையில் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: நாளை(டிச.10) பள்ளிகளுக்கு விடுமுறை?

ABOUT THE AUTHOR

...view details