தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறையிலிருந்து வெளியில வந்துடீங்களா? பெயில் கிடைச்சுதா? - எம்எல்ஏவை கிண்டல் செய்த சபாநாயகர்! - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

சட்டத்துறை மானியக் கோரிக்கையின் போது, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமீது மீண்டும் கேள்வி எழுப்ப முயன்ற போது சபாநாயகர் அப்பாவு, சிறையிலிருந்து வெளி வந்து விட்டீர்களா? பெயில் கிடைத்து விட்டதா? என நகைச்சுவையாகப் பேசினார்.

அப்பாவு
அப்பாவு

By

Published : Apr 27, 2022, 6:52 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.27) சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமீது பங்கேற்று பேசினார்.

அப்போது, "10 ஆண்டுகளுக்கு மேல் சிறைச்சாலையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசு அமைத்த குழு விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

விரைவாக விசாரணை மேற்கொண்டு வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை ஆனவர்கள் மீதமுள்ள காலங்களை தங்கள் உறவுகளோடு வாழ வழிவகை செய்ய வேண்டும்" என நீண்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விரிவாக பதில் அளித்து அமர்ந்தார். அதன் பிறகு மீண்டும் அப்துல் சமீது கேள்வி எழுப்ப முயன்றபோது, சபாநாயகர் அப்பாவு, சிறையிலிருந்து வெளி வந்து விட்டீர்களா? பெயில் கிடைத்து விட்டதா? என நகைச்சுவையாக பேசினார்.

இதையும் படிங்க: 'நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம். நீங்க தான் நல்லபடியாக திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' - கலகலப்பாய் பேசிய கடம்பூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details